உகாண்டா நாட்டின் ஜனநாயகக் கட்சியின் (Democratic Party’s Secretary General) பொதுச் செயலாளர் மத்தியாஸ் சுபுகா (Mathias Nsubuga) மரணமடைந்த துக்க செய்தியை, அந்த கட்சியின் தலைவர் நாபர்ட் மாவோ (Norbert Mao) ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.
மத்தியாஸ் சுபுகா
மத்தியாஸ் சுபுகா கடுமையான பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மருத்துவமனையில் அவசர சிகிட்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிட்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஞாயிறு மாலையில் மரணமடைந்தார்.
உகாண்டா அதிபர் "யொவேரி கே முசவேனி"
அவருடைய மரண செய்தியை அறிந்த உகாண்டா அதிபர் யோவேரி முசவெனி, "நாட்டின் சிறந்த மற்றும் சகிப்புத்தன்மை கொண்ட அரசியல்வாதியை இழக்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் உகாண்டா நாடும் அவரை இழக்கிறது என்றும் கூறியுள்ளார்.