ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா தனது டி20 மற்றும் 50 & 50 போட்டிகளுக்கான தேசிய கிரிக்கெட் அணிக்கான அறிவித்த வீரர்களில் தமிழக வீரர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார்.
இந்த அணியில் தென்தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலை சேர்ந்த அனீஃப் ஷா என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரும், இவரது சகோதரர் முஹம்மது அஷ்ரப்பும் சேலஞ்சர்ஸ் என்ற கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடி வருகின்றனர்.

கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த திறனை வெளிப்படுத்தி வந்த இவரை தேசிய அணிக்காக விளையாட தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த அணி கென்ய தலைநகர் நைரோபியில் நடைபெற உள்ள ட்வெண்டி ட்வெண்டி போட்டிகளில் பங்கேற்றனர்.

சேலஞ்சர்ஸ் கிரிக்கெட் கிளப்பின் உரிமையாளர் வாஹித் முஹம்மத் என்பவரும் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.