உகாண்டா மேற்கு பகுதியில் உள்ள கசேஸே மாவட்ட (Kasese District) பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான வின்னீ கிஸா (Winnie Kiiza) பேசும் போது,

"ஜனாதிபதி யோவேரி முசேவெனி (Yoweri Museveni), தானாகவே ஒரு சர்வாதிகாரி என்ற தகுதியை பெற்றுள்ளார்" என கூறினார்.
மேலும், ரிவன்சுருரு ராஜ்ஜியத்தில் (Rwenzururu Kingdom) இரக்கமற்ற தாக்குதல் கையாளப்பட்டு, பலர் கொல்லப்பட்டனர். முசேவெனி, ஒரு நல்ல வழியில் உகாண்டாவை வழிநடத்தி செல்லவேண்டும் என்றால், அவர் தனது ஈகோவை தள்ளி வைத்து விட்டு, மக்கள் விரும்பும் வழியில் வாழ வேண்டும்.
அண்மையில் நடந்த தேர்தல் முடிவுகளில், கசேஸே மாவட்ட மக்கள் அதிபர் முசேவெனிக்கு எதிராக வாக்களித்தனர்.ஏனெனில் கசேஸே மாவட்ட மக்களுக்கு, அங்கு நடந்த தாக்குதல்கள் ஒரு தண்டனையாக இருந்தது. ரிவன்சுருரு ராஜ்ஜியத்தின் (Rwenzururu Kingdom) தலைவர் மும்பெரே (Mumbere) விடுதலை செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஞாயிறு அன்று கசேஸே மாவட்ட ரிவன்சுருரு ராஜ்ஜிய (Rwenzururu Kingdom) பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் பிரிவினைவாதிகளுக்கு, போலீசாருக்கும் நடைபெற்ற தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து ரிவன்சுருரு ராஜ்ஜியத்தின் அரசர் (King) சார்லஸ் மும்பெரே (King Charles Mumbere) கைது செய்யப்பட்டார்.
![]() |
King Charles Mumbere is accused of separatism by the Government |
0 Comments