உகா சேவா சார்பில் 6-வது உணவு திருவிழா நேற்று (04-12-2016) உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள கோல்ப் கோர்ஸ் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 1100 பேர் கலந்து கொண்டனர்.

இந்த உணவு திருவிழாவில் 35 வகையான அசைவ, சைவ உணவு வகைகளும், 5 வகை இனிப்பு உணவுகளும் வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கான உணவுகளை தயாரிக்க, இந்தியாவில் இருந்து புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர் அலி அக்பர் என்பவர் வரவழைக்கப்பட்டு இருந்தார்.

சைவ உணவுகளை சுஷ்மா குழுவினர் தயாரித்திருந்தனர். திருவிழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை உகா சேவா அமைப்பின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்திருந்தனர்.

0 Comments