உகாசேவா டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற 6-வது உணவு திருவிழா கம்பாலாவில் வைத்து நேற்று (04-12-2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உணவு தயாரிக்க இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கன்னியாகுமரி மாவடடம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பிரபல சமையல் கலை வல்லுநர் அலி அக்பர் அழைக்கப்பட்டு இருந்தார்.

அவரின் கைப்பக்குவத்தில் 35 க்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்கள் தயாரிப்பட்டது. அவரின் திறமையை கௌரவிக்கும் பொருட்டு, உகாசேவா சார்பில் "சமையல் புயல்" என்ற பட்டம் அலி அக்பருக்கு வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை உகாசோவாவின் பொது செயலாளரும், உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவருமான வாஹித் முஹம்மது அவர்கள் வழங்கினார். நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் விருது பெற்ற சமையல் கலை வல்லுநர் அலி அக்பர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்.
0 Comments