கம்பாலா நகசெரோ பகுதியில் உள்ள தபிலிக் மசூதியில் கடந்த செவ்வாய்கிழமை 27-ம் தேதி அதிகாலையில் போலீசாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் மதகுருமார்கள் கொலையின் காரணமாக நடத்தப்பட்டது.
General of Police, Gen. Kale Kayihura
சோதனை தொடர்பாக போலீஸ் ஜெனரல் காலே கயிஹுரா (Gen. Kale Kayihura) நகுரு (Naguru) போலீஸ் தலைமையகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது,
முஸ்லீம் மதகுரு மற்றும் சிப்பாய் மேஜர் முஹம்மது கிக்குண்டு (Muhammad Kiggundu) அண்மையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்மையில் நடந்து வரும் விசாரணைகளில் முக்கிய சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. கடந்த நவம்பர் 26-ம் தேதி மேஜர் முஹம்மது கிக்குண்டு கொலை தொடர்பாக மசூதியில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
Nakasero Tabiliq Mosque
சோதனையில் மதகுருமார்கள் கொலை தொடர்பாக சந்தேகப்படும் படியாக சில துப்பாக்கிகள் மற்றும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகப்படும் நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு போலீஸ் ஜெனரல் கூறினார்.

நகசெரோ “தபிலிக்” மசூதி சோதனையில் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலை தபிலிக் மதகுருமார்கள் மறுக்கின்றனர்.