கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (Godfrey Baguma) (வயது 47). இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்தார். இவரின் உருவத்தை வைத்து இவரை பலர் கேலி, கிண்டல் செய்து ஒதுக்கி வைத்துள்ளனர். இவருக்கு சிறு வயதிலிருந்தே பாடுவதில் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது கடின முயற்சியால் இன்று உகாண்டாவில் பிரபல பொப் பாடகராக இவர் திகழ்கிறார். இது பற்றி காட்ஃப்ரே பாகுமா கூறியதாவது,
நான் இப்படி பிறந்ததால் சிறு வயதிலிருந்தே என்னை எல்லோரும் வினோதமாக தான் பார்ப்பார்கள். அது எனக்கு பின்னர் பழகிவிட்டது. எனக்கு சிறு வயதிலிருந்தே இசையில் ஆர்வம் அதிகம். என் திறமையை பார்த்து எனக்கு பலர் பாட வாய்ப்பு வழங்கினார்கள். பின்னர் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னர் என் மனைவி என்னை விட்டு போய்விட்டார்.

Godfrey Baguma and his wife Kate Namanda
பிறகு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இசைக்கு தற்போது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த இசை துறையில் இன்னும் நான் சாதிப்பேன் என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
காட்ஃப்ரே, தனது மனைவி மற்றும் குழந்தையுடன்