உகாண்டாவில் இந்தியர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களால்
இருப்புபாதை அமைப்பதற்காக 125 ஆண்டுகளுக்கு முன்பாக
கூலிகளாக அதிகமாக குஜராத்திலிருந்து அழைத்து வரப்பட்டார்கள். இந்த இருப்புப்பாதை கென்யா நாட்டிலுள்ள மொம்பாசா எனும் துறைமுகப் பட்டினத்தை இணைக்கிறது.
![]() |
| இருப்புப்பாதை பணியில் ஈடுபட்ட இந்தியர்கள் |
உகாண்டாவில் இருந்துதான் சகாரா பாலைவனத்தையே வளம் கொழிக்கச் செய்யும் நைல் நதி உருவானாலும் கடல்வழி மார்க்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்புப்பாதை பணிகள் முடிந்த பிறகு இந்தியர்கள் உகாண்டவிலேயே தங்கிவிட்டார்கள். அப்போது உகாண்டாவும் பரந்து விரிந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாகவே இருந்ததால் பிரச்சனைகள் எதுவுமின்றி வாழ்ந்து வந்தனர்.

உகாண்டாவுக்கு சுகந்திரம் 1963 ல் கிடைத்தபிறகு பிரச்சனைகள் சிறிது சிறிதாக ஆரம்பித்து 1972 ல் இடி அமீன் ஆட்சியில் ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் இந்தியர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர். அவர்கள் மிகச்சிறிய அளவினரே இந்தியாவிற்கு திரும்பினர் மற்றவர்யாவரும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.
1979 ல் இடி அமீன் வீழ்ச்சிக்குப் பிறகு 1980 களிலிருந்து திரும்பவும் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள். இப்போதைய இந்தியர்கள் ஜனத்தொகை வெறும் பனிரண்டாயிரம் தான். தற்போதைய அரசாங்கமும் இந்தியர்களின் உழைப்பிற்கும், முதலிடிற்கும் ஓரளவு மதிப்பு அளிப்பதால் அமைதியும் ஸ்திரத்தன்மையும் இப்போது உகாண்டாவில் நிலவி வருகிறது.
தகவல்
ராஜா வாவுபிள்ளை
கம்பாலா,
உகாண்டா




0 Comments