உகாண்டாவின் மேற்கு பகுதியில் உள்ள கசேசே நகரில் ரோந்து சென்ற அரசு படைகளுக்கும் அங்கு பதுங்கியிருந்த பிரிவினைவாதிகளுக்கும் (தனி நாடு கோரும் பிரிவினைவாதிகள்) இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் கடுமையாக சுட்டு மோதி கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 14 போலீசார் மற்றும் 41 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டனர்.


அரசு படைகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 55 பேர் பலியானதை உயர் போலீஸ் அதிகாரி ஆண்ட்ரு பெலிக்ஸ் கவீசி (Andrew Felix Kaweesi ) உறுதி செய்தார்.


0 Comments