கம்பாலாவில் உள்ள மகெரேரே பல்கலைக்கழகத்தின் (Makerere University) விவகாரங்களில் ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள விசாரிக்கப்படும் குழுவின் தலைவர் ஆபெல் வெண்டைர் (Abel Rwendeire), பூட்டப்பட்டிருக்கும் பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்க ஜனாதிபதி முசேவெனிக்கு (Museveni, President Of Uganda) அழைப்பு விடுத்துள்ளார்.
Abel Rwendeire
அவர், பல்கலைக்கழகம் மூடப்பட்டு இருப்பதால், கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பல்கலைக்கழகம் திறந்தால், எங்களுடைய வேலையை செய்ய சிறப்பானதாக இருக்கும், என்று கூறினார். இதை அவர், உகாண்டா ஊடக நிலையத்தில் (Uganda Media Centre) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
Makerere University
மகெரேரே பல்கலைக்கழகத்தை விசாரிக்கப்படும் குழுவை (Visitation Committee), அதிபர் முசேவெனி பல்கலைக்கழகம் மூடப்பட்ட பிறகு நியமித்தார். பல்கலைக்கழக ஊழியர்கள் 28 பில்லியன் (Shs28bn) உகாண்டா ஷில்லிங்ஸ் ஊக்கத்தொகை நிலுவையில் உள்ளதை தொடர்ந்து, வேலைநிறுத்தம் செய்து வந்த நிலையில், பல்கலைக்கழகம் மூடப்பட்டது.