"உகா சேவா" சார்பில் மாபெரும் உணவு திருவிழா கம்பாலாவில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் ஹோட்டலில் (Golf Course Hotel) வைத்து டிசம்பர் 4 ஆம் தேதி பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெறுகிறது.
இந்த உணவு திருவிழாவில் சைவ உணவுகள், அசைவ உணவுகள் மற்றும் இந்திய உணவு வகைகள் என சுமார் 50 வகைகளுக்கும் மேற்பட்ட உணவு பதார்த்தங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக புகழ் பெற்ற சமையல் கலை வல்லுநர் இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார்.
உணவு திருவிழாவில் கலந்து கொள்ளும் பெரியவர்களுக்கு தலா 35,000 (UGX 35,000) உகாண்டா ஷில்லிங்ஸ் கட்டணமும், சிறியவர்களுக்கு தலா 10,000 (UGX 10,000) உகாண்டா ஷில்லிங்ஸ் கட்டணமும் பெறப்படுகிறது. விழா ஏற்பாடுகளை "உகா சேவா" அறக்கட்டளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் செய்து வருகின்றனர்.