உகாண்டா நிதி அமைச்சர் மடியா கசைஜா (Matia Kasaija) பார்லிமெண்ட்டில் பேசும் போது, "பொருளாதாரம் பெரும் சவால்களை எதிர் கொண்டு வருகிறது. அதை அரசு ஒரு குறுகிய காலத்திற்குள் நிலைப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளும்" என்றார்.

வெளி மற்றும் உள்நாட்டு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நாணய மாற்று விகித மதிப்பு தொடர்ந்து (Depreciation of Exchange Rate) குறைந்து வருவதால் ஏற்படும் அழுத்தம் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மேலும், உலக வங்கி கடன்களுக்கு தடை, தேர்தல் மற்றும் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட சூழ்நிலைகள், புவியியல்சார் அரசியல் நிலைமைகள் போன்றவைகள் முக்கிய கட்டுப்பாடுகளாக உள்ளன, என்றும் கசைஜா கூறினார்.


0 Comments