போலீஸ் ஜெனரல் காலே கயிஹுரா (Kale Kayihura), உகாண்டா அதிபர் யோவேரி ககுட்டா முசேவேனி (Yoweri Kaguta Museveni) யின் இருக்கை மீது ஆசைப்படுவதாக எழுந்த வதந்தியை மறுத்தார்.
![]() |
Kale Kayihura |
போலீஸ் ஜெனரல் காலே கயிஹுரா, பாலே (Mbale) பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற, சிபி, எல்கான் மற்றும் புகேடி (Sipi, Elgon and Bukedi) மண்டலங்களின் போலீஸ் சமூக வெளியீட்டு (launch of community policing) விழாவில் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசும் போது,
"நான் ஜனாதிபதி ஆக வேண்டும் விரும்பியதாக எழுத்த பேச்சு முட்டாள் தனமானது. இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்ற, பொய்யான தகவல்" என்று உறுதி கூறினார். மேலும் அவர் கூறும் போது, "என்னுடைய லட்சியம், ஒரு கோழி கூட திருடு போகாமல், பொதுமக்கள் மிக பாதுகாப்பாக வாழவேண்டும்" என்றும் பேசினார்.
போலீஸ் ஜெனரல் காலே கயிஹுரா 2005 ஆம் ஆண்டு போலீஸ் ஜெனரலாக இருந்த எட்வர்ட் கடும்பா வமலா (Edward Katumba Wamala) என்பவருக்கு பதிலாக பணி அமர்த்தப்பட்டார்.
0 Comments