கம்பாலா பகுதிகளில் நடைபாதையில் கடை வைத்திருப்போர் உடனே காலி செய்யவேண்டும் என உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனி உத்தரவிட்டார். மேலும் அவர், வர்த்தகத்தில் ஒரு ஒழுங்கை நிலைநாட்ட தெருவோர கடைகளை மாற்ற வேண்டியுள்ளதாக விளக்கியுள்ளார். அதை தொடர்ந்து கம்பாலா அமைச்சர் பெட்டி கம்யா (Betty Kamya) கூறியிருப்பதாவது,

தெருவோர கடை வைத்திருப்பவர்கள் உடனடியாக காலி செய்யவேண்டும். இல்லையெனில் அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

KCCA (Kampala Capital City Authority) யின் கணக்குப்படி 1,900 நடைபாதை வியாபாரிகள் இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.


0 Comments