உகாண்டா அதிபர் யோவேரி முசேவெனி KCCA (Kampala Capital City Authority) யின் புதிய மனிதவள மேலாண்மை இயக்குனராக (Human Resource Director) ரிச்சர்டு லுலே (Richard Lule) என்பவரை நியமனம் செய்துள்ளார். இவர் இம்மாதம் (November 2016) முதல் இப்பதவியில் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே பல்வேறு மனிதவள மேம்பாட்டு நிறுவனங்களிலும், தனியார் தொண்டு நிறுவனங்களிலும் பணியாற்றி களப்பணி செய்த முதிர்ந்த அனுபவம் பெற்றவராவார்.
![]() |
| Richard Lule |
இவர் ஜனவரி 2012 முதல் ஆகஸ்ட் 2015 வரை KCCA-யின் மனிதவள மேம்பாடு மற்றும் நிறுவன மேம்பாட்டின் உதவி இயக்குனராகவும், ஆகஸ்ட் 2010 முதல் ஜனவரி 2012 வரை செஞ்சினரி வங்கியில் (Centenary Bank) கையகப்படுத்துதல் மற்றும் மேலாண்மை (Acquisition and Management) பிரிவில் மேலாளராகவும், பிப்ரவரி 2006 முதல் ஆகஸ்ட் 2010 வரை எஸ்காம் உகாண்டா லிமிட் (Eskom Uganda Limited) நிறுவனத்தில் நிறுவன மேம்பாடு மற்றும் மனிதவள பிரிவின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.



0 Comments