உகாண்டா இராணுவ அதிகாரி ஜூலியஸ் ஃபாக்கி ஓகேட்டா (Major General Julius Facki Oketta) நேற்று முன்தினம் கம்பாலாவில் உள்ள காடிக் மருத்துவமனையில் (Kadic Hospital) வைத்து மரணமடைந்தார். இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக சொல்லப்படுகிறது.
உகாண்டா மக்கள் பாதுகாப்பு படையின் (Uganda People’s Defence Force (UPDF)) சீனியர் கமாண்டராக பணியாற்றி வந்தார். ஓகேட்டா இறப்பதற்கு முன்னர் உகாண்டா பிரதமர் அலுவலகத்தில் தேசிய அவசரநிலை ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாடுகளுக்கான இயக்குனராக (Director of National Emergency Coordination and Operations) பணியாற்றி வந்தார்.

மேலும் இவர், தேசிய இராணுவத்தில் 6-வது பிரிவுக்கு தளபதியாகவும், UPDF உள்ள தளவாடங்கள் மற்றும் பொறியியல் துறையின் தலைமை பொறுப்பிலும், உகாண்டா தொடர்பு அதிகாரியாக சூடானிலும், உகாண்டா பாதுகாப்பு அமைப்பில் கொள்முதல் மற்றும் அகற்றுதல் யூனிட் (Head of the Procurement and Disposal Unit) பிரிவில் தலைவராகவும், UPDF-ன் பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பிரனாகவும், ஆணைக்குழுக்கள், சட்ட ரீதியான அதிகாரிகள் மற்றும் மாநில குழுவின் (Committee on Commissions, Statutory Authorities and State Enterprises) உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும் எபோலா எதிரான போராட்டத்தில் அவரது அயராத முயற்சிகளை பாராட்டி லைபீரியா ஜனாதிபதி பதக்கம் வழங்கி கௌரவித்தார்.