FDC கட்சியின் தலைவர் டாக்டர் கிஸ்ஸா பெசிக்ஜெ, நேற்று பிற்பகல் கசாங்கட்டி (Kasangati) பகுதியில் உள்ள தன் வீட்டில் இருந்து, கம்பாலாவில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள காரில் புறப்பட்டார்.

அவர், காரில் கிளம்பும்போது அவரது கார் போலீசாரால் தடுக்கப்பட்டது. உடனே அவர் காரை அங்கேயே விட்டுவிட்டு, அருகில் இருந்த "போடா போடா" நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றார்.

அங்கிருந்து ஒரு "போடா போடா" மூலம் புறப்பட்டார். அப்போது, அவர் ஹெல்மெட் அணியவில்லை. எனினும், போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிய ஊக்கப்படுத்தினர். ஹெல்மெட் அணியாமலே அவர் பயணம் செய்தார்.


0 Comments