கம்பாலா இஸ்லாமிய நண்பர்கள் சங்கம் சார்பில் வரும் 6-ம் தேதி கடாஃபி மஸ்ஜித் உள்ளரங்கத்தில் வைத்து மாபெரும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
![]() |
| கம்பாலா கடாஃபி மஸ்ஜித் |
அன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் "இஸ்லாம் கூறும் இனிய சகோதரத்துவம்" என்ற தலைப்பில் சகோதரர் செய்யது அலி அவர்களும், "இஸ்லாமிய குடும்பங்களின் கடமைகளும், உரிமைகளும்" என்ற தலைப்பில் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், நவீன உலகில் இஸ்லாமிய பெண்கள்" என்ற தலைப்பில் ஆலிமா நஸ்ரின் பானு" அவர்களும், "தாஃவாவின் அவசியமும், நடைமுறைகளும்" என்ற தலைப்பில் சகோதரர் ஷேக் அலி அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.
![]() |
| கடாஃபி மஸ்ஜித்தின் உள்புற தோற்றம் |
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கம்பாலா இஸ்லாமிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் மொஹிதீன் மீரான், மொஹம்மத் வாஹித், ஹலீம், ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் செய்துள்ளனர்.




0 Comments