தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் உகாண்டா மண்டலம் துவக்கவிழா 30.10.16 அன்று மாலை நடைபெற்றது.
துவக்கவிழாவை தலைவர் MH ஜவாஹிருல்லா மாநில தலைவர் (மமக) அவர்கள் காணொலி மூலமாக சிறப்புரையாற்றி துவக்கிவைத்தார்.
உகாண்டா தமிழ் சங்கத்தலைவர் முகம்மது வாஹீத் அவர்கள் முன்னிலை வகித்தார். தொகுப்புரை முஹம்மது அஷ்ரப் வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட்து. அதன்படி,
தலைவர்: முகம்மது வாஹீத் (மாதவலயம்), செயலாளர்: முஹம்மது அஷ்ரப் (குளச்சல்), பொருளாளர்: நியாஸ் (மாதவலயம்), துணை தலைவர் சாதிக் (கோட்டார்), துணை செயலாளர் செய்யாது அலி (திருவை), துணை செயலாளர் முஹம்மது யாசர் (மாதவலயம்), துணை பொருளாளர் அப்துல் வாஹீத் (மாதவலயம்) ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினராகவும்,
ஷாபி (மணவை), நாஷுருல் (மாதவலயம்), யூசுப் (மாதவலயம்), பைசல் (மதுரை), சபீக் (கோட்டார்), ஷபீக் (பெருவிளை)
அப்பாஸ் (மாதவலயம்), ஜாஸிப் (மாதவலயம்) ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட்னர். அப்துல் முபாரக் (மாதவலயம்) ஊடகத்துறை தொடர்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்படடார்.

நிகழ்ச்சியில் கொண்டுவரப்படட தீர்மானங்கள் பின்வருமாறு,
1) தீர்மானங்கள் உகண்டா மக்களுக்காக அவசர ஊர்தி வாங்கி இலவச பயண்பாடு
2) ரத்ததான முகாம் உகாண்டாவில்
3) இலவச மருத்துவ முகாம் உகாண்டாவில்
4) உகாண்டா மற்றும் நமது ஊர்களிலும் கல்வி உதவித்தொகை வழங்குவது
5) மக்கள் உரிமை வார இதழை உகாண்டா உறுப்பினர்களுக்கு வாரம் வாரம் வழங்குவது
6) உறுப்பினர் அடையாள அட்டை மாநிலத்திடம் இருந்து பெற்றுக்கொள்வது
7) தாருல் ஹிதாயா மதரஸாக்கள் குமரி மாவட்டத்தின் பலபகுதிகளில் நிறுவுவது
8) இலவச மருத்துவமனை கொண்டு வருவது உகாண்டா மற்றும் தமிழகத்தில்
9) பொதுசிவில் சட்டம் என்கிற பெயரில் சிறுபான்மை முஸ்லிம்களை வஞ்சிக்க நினைக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறது.
நிகழ்ச்சி முடிவில் துணைத்தலைவர் சாதிக் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உகாண்டா தமுமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.


0 Comments