உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள கடாஃபி மசூதி உள்ளரங்கத்தில் வைத்து KIFA (Kampala Islamic Friends Association) சார்பாக நேற்று (06-11-2016) மாபெரும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு சகோதரர் காஜா அவர்கள் தலைமை தாங்கினார். சகோதரர் அப்ஸல் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியினை துவங்கி வைத்தார். "இஸ்லாம் கூறும் இனிய சகோதரத்துவம்" என்ற தலைப்பில் சகோ. செய்யது அலி அவர்களும், இஸ்லாமிய குடும்பம் கடமைகளும், உரிமைகளும் என்ற தலைப்பில் சகோ. ரஹ்மத்துல்லாஹ் அவர்களும், நவீன உலகில் இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில் சகோதரி. ஆலிமா நஸ்ரின் பானு அவர்களும், தஃவாவின் அவசியமும், நடைமுறைகளும் என்ற தலைப்பில் சகோ. ஷேக் அலி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரர் அஹ்மது கனி அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
காலை 10.30 முதல் மதியம் 1 மணி வரை முதல் அமர்வாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சகோதரர் செய்யது அலி மற்றும் சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு உணவு விருந்து நடைபெற்றது. பின்னர் மாலை 2 மணி முதல் 4 மணி வரை நடைபெற்ற 2-வது அமர்வில் ஆலிமா நஸ்ரின் பானு மற்றும் சகோதரர் ஷேக் அலி ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
உணவு  விருந்து நடைபெற்ற காட்சி