உகாண்டா நாட்டில் சட்டவிரோதமாக தொழில் புரிந்து வரும் இந்திய வர்த்தக நிலையங்களை விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரவை, வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் அமிலியா கியாம்படே (Amelia Kyambade, Trade and Industry Minister) பிறப்பித்துள்ளார். அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அமைச்சர் அமிலியா, லிரா நகராட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜிம்மி அகேனா (Jimmy Akena) தலைமையில் நேற்று (18-ம் தேதி) லிராவில் (Lira) நடைபெற்ற மாவட்ட சபை மண்டலக் கூட்டத்தில், இந்திய வர்த்தகர்களை விசாரணை நடத்தி, சட்டவிரோதமான முறையில் வர்த்தகம் புரிபவர்களை வெளியேற்றப்பட வேண்டும் என கூறினார்.
சட்டவிரோதமாக செயல்படும் இந்திய முதலீட்டாளர்கள் உகாண்டாவை விட்டு 31 டிசம்பர் 2016 க்குள்ளாக வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளார். உகாண்டாவில் சில்லறை வர்த்தகம் புரிந்து வரும் இந்திய வர்த்தகர்களால், உள்ளூர் வணிகர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
0 Comments