உகாண்டா தேர்தல் ஆணையக்குழு தலைவராக (Head of the Electoral Commission) நீதிபதி சைமன் முகேன்யி யபாகமா (Judge Simon Mugenyi Byabakama) என்பவரை நியமிக்க, அதிபர் முசேவெனி பரிந்துரை செய்துள்ளார். இவர் ஏற்கனவே அந்த பொறுப்பில் இருந்து வந்த பத்ரு கிக்குண்டு (Badru Kiggundu) என்பவருக்கு பதிலாக இந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.
புதிய தேர்தல் ஆணையக்குழுவிற்கு யபாகமா உள்பட 6 பேர், அதிபரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவர்களில் ஆணையக்குழு துணை தலைவராக ஹஜ்ஜத் ஆயிஷா லுபெகா (Hajjat Aisha Lubega, Deputy Chairperson), பீட்டர் எமோருட் (Peter Emorut), முன்னாள் கஜாரா பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் டசோபியா (Steven Tashobya), பேராசிரியர் ஜார்ஜ் பிவங் (Prof George Piwang) மற்றும் முஸ்தபா சேபக்கலா கிகோஸி (Mustapha Ssebaggala Kigozi) போன்றோரும் அடங்குவர்.

இவர்கள், 14 ஆண்டுகளாக பதவியில் இருந்து வந்த பத்ரு கிக்குண்டு தலைமையிலான தேர்தல் ஆணைய குழுவிற்கு பதிலாக பெறுப்பேற்கின்றனர்.