கம்பாலாவில் உள்ள லுகோகோ ஃபாரஸ்ட் மால் (Lugogo Forest Mall) பகுதியில் மேத்யூ கன்யாமுன்யூ (Mathew Kanyamunyu) என்பவர், அகேனா கென்னத் வாட்மோன் (Akena Kenneth Watmon) என்பவரை துப்பாக்கியால் சுட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Mathew Kanyamunyu
நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு அகேனா கென்னத் வாட்மோன் என்பவர் ஏடிம்-ல் இருந்து பணம் எடுப்பதற்காக லுகோகோ மால் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் காரில் ரிவர்ஸ் வரும்போது, மேத்யூ கன்யாமுன்யூ என்பவரது காரின் பின் பகுதியில் இடித்ததாகவும், இதனால் அவருடைய வாகனம் சிறிது சேதமடைந்ததாகவும் தெரிகிறது.
Akena Kenneth Watmon
இதனால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்த நிலையில், அகேனா கென்னத், அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தொடர்ந்து சேதமடைந்ததற்கான செலவையும் தர ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதை எதையுமே மேத்யூ கேட்க்கும் சூழ்நிலையில் இல்லை. சிறிது நேரத்தில் தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து அகேனா கென்னத் வயிற்று பகுதியில் சுட்டதாக தெரிகிறது.

இதனால், சிறிது நேரத்திலேயே அகேனா கென்னத் இறந்தார். உடனே மேத்யூ, அவரை தன்னுடைய காரில் நேற்று நார்விக் (Norvik) மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்பு நடைபெற்ற போலீஸ் விசாரணையில், தன்னை நல்லவராக காட்டிக்கொண்டு, தனக்கு இதற்கு பொறுப்பு இல்லையென கூறியதாக தெரிகிறது.

சந்தேகமடைந்த போலீசார் மேத்யூவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மேத்யூ, கம்பாலா பகுதியின் ஜின்ஜா சாலையில் உள்ள காவல் நிலையத்தில் உள்ளார்.