நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியானது செஞ்சூரியனில் நேற்று கனமழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளும் இதே மைதானத்தில் நவம்பர் 28 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸானது பரவி வருகிறது. புது வகை கொரோனாவை கருத்தில் கொண்டு இரு கிரிக்கெட் வாரியமும் கலந்து ஆலோசனை மேற்கொண்டு போட்டிகளை ஒத்திவைக்க முடிவுசெய்தன.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி போலெட்சி மொசெகி கூறும்போது, "தற்போது நிலவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையால் நாங்கள் ஏமாற்றமடைகிறோம். நிலைமை சீரானபிறகு போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
0 Comments