ஸ்பெயினில் உள்ள வாலன்சியா நகரில் சர்வதேச தடகள போட்டிகள் நடந்தது. கொரோனா அச்சம் காரணமாக விளம்பரதாரர்கள், பத்திரிகையாளர்கள், பணியாளர்கள் என, 400 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் உகாண்டாவின் ஜோசுவா செப்டெகி (Joshua Cheptegei), 26 நிமிடம், 11.02 வினாடியில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் குறைந்த நேரத்தில் இலக்கை அடைந்து புதிய உலக சாதனை படைத்தார். 

/ இதற்கு முன், 2005ல் எத்தியோப்பிய வீரர் கெனேனிசா பெகேலே 26 நிமிடம், 17.53 வினாடியில் இலக்கை அடைந்தது சாதனையாக இருந்தது. கடந்த 2018 ல் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் 10,000 மற்றும் 5,000 மீ., ஓட்டத்தில் தலா ஒரு தங்கம் வென்ற செப்டெகி, கடந்த ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் 10,000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.
பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் இலக்கை 14 நிமிடம், 6.62 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த எத்தியோப்பியாவின் லெடிசென்பெட் கிடி, புதிய உலக சாதனை படைத்தார். 

இதற்கு முன், 2008ல் எத்தியோப்பியாவின் திருனேஷ் திபாபா (14 நிமிடம், 11.15 வினாடி) உலக சாதனை படைத்திருந்தார்