உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் 2019 ஆம் ஆண்டிற்கான தமிழர் திருநாள் கொண்டாட்டம் ஜனவரி 27-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கம்பாலாவில் உள்ள சிவாட்டுலே ரிகிரியேஷன் சென்டர் (Kiwatule Recreation Centre, Kampala) வைத்து நடைபெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. மதியம் அறுசுவை உணவுடன் கூடிய விருந்து வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான நுழைவுக் கட்டணமாக 10,000 உகாண்டா ஷில்லிங்க்ஸ் (10,000 UGX) பெறப்பட்டு கூப்பன் வழங்கப்படுகிறது.
கூப்பன் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் +256 751306838, +256 752735716, +256 758951124, +256 751190290

விழா ஏற்பாடுகளை சங்கத்தலைவர் எம்.எஸ்.சலீம், செயலாளர் முஹம்மது ராபி, செயற்குழு உறுப்பினர் வெங்கட் கிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


0 Comments