கம்பாலாவில் இருந்து மசாக்கா செல்லும் சாலையில் பீன்ஸ் ஏற்றிக்கொண்டு சென்ற டிரக் வாகனம் (பதிவு எண் UAW 524M), கடோங்கா (Katonga) பகுதியில் வைத்து மற்றொரு வாகனத்தின் மீது (பதிவு எண் UAZ 016W) மோதி விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்து நேற்று (13-12-2017) அதிகாலை 4 மணி அளவில் நடத்துள்ளது. இதில் டிரக்கில் இருந்த 3 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்கள், டியோகிராசியஸ் புசிங்கே (Deograsius Businge), பெர்னார்ட் புஷங்கா (Bernard Bushanga) மற்றும் கமுகிஸா (Kamugisha) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
நபியேவாங்கா (Nabyewanga) பகுதி போலீஸ் அதிகாரி ஜோஷ்வா ருக்விசா (Joshua Rugwiza), இந்த விபத்து பற்றி கூறும்போது, டிரக் ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
0 Comments