உகாண்டா, கம்பாலாவில் அமைந்துள்ள கியாம்போகோ பல்கலைகழகத்தின் 14-வது பட்டமளிப்பு விழா நேற்று (13-12-2017) நடைபெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பல்வேறு துறைகளில் 6000-க்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர். இதில் 203 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வேந்தர் பேராசிரியர் ஜாண் மேரி சேபுஃபு (Prof. John Mary Ssebuufu) கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இந்த பல்கலைகழகத்தில் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். துணை வேந்தராக எல்லி கடுங்குகா (Elly Katunguka) பணியாற்றி வருகிறார்.