இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு திருப்ப கொண்டு வருவது தொடர்பான விசாரணை லண்டன் கோர்ட்டில் நடைபெறுகிறது. வழக்கு விசாரணைக்காக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர் ஆகி உள்ளார்.

முன்னதாக விஜய் மல்லையா பேசுகையில் எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை எனக்கூறி உள்ளார்.
“எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தவறானவை, கற்பனையானது மற்றும் அடிப்படையற்றது. சொல்வதற்கு வேறு எதுவும் கிடையாது, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதே ஆதாரமாகும்,” என கூறிஉள்ளார் விஜய் மல்லையா. மேலும் தொடர்ச்சியான கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்ட விஜய் மல்லையா நான் முடிவு எடுப்பவர் கிடையாது என கூறிவிட்டார்.
0 Comments