உகாண்டா, கம்பாலாவில் தமிழகத்தின் பிரபல புத்தக பதிப்பகமான மணிமேகலை பிரசுரம் மற்றும் உகாண்டா தமிழ் சங்கம் இணைந்து, நூல் வெளியீட்டு விழா மற்றும் புத்தக கண்காட்சி விழாவினை நடத்தியது.
விழா நேற்று (12-11-2017) மாலை 6 மணி அளவில் புகாண்டா சாலையில் உள்ள பாட்டிடார் சமாஜன் (Patidar Samajan, Buganda Road, Kampala) அரங்கில் வைத்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரபல தமிழ் புத்தக பதிப்பாளர் முனைவர் ரவி தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டு, புத்தக கண்காட்சியினை துவங்கி வைத்து, சிறப்புரை வழங்கினார்.
மேலும், உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. எம்மெஸ் சலீம், பொதுசெயலாளர் முஹம்மது ராபி, சாதிக் சாகுல், வெங்கட் கிருஷ்ணன் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஏராளமான உகாண்டா வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு புத்தகங்களை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை உகாண்டா தமிழ் சங்கம் செய்திருந்தது.