பிரதமர் மோடி பதவியேற்ற முதல் யோகாவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அவரது கோரிக்கையை ஏற்று ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகாவை மக்கள் ஆர்வமாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சவுதி அரசும், யோகாவை சிறந்த பயிற்சியாக ஏற்றுக் கொண்டு, விளையாட்டில் ஒரு பகுதியாக அங்கீகரித்துள்ளது.

சவூதி அரேபியாவில் செவ்வாயன்று வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சின் கீழ் யோகா ஒரு விளையாட்டு நடவடிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. இது சவுதி அரசாங்கத்திடம் இருந்து உரிமம் பெறுவதன் மூலம் அதை நடைமுறைப்படுத்த அல்லது பரப்புவதற்கு அனுமதிக்கிறது.