உருகுவே நாட்டின் சன்சின் மாகாணம், நெம்பி பகுதியைச் சேர்ந்தவர் அடோல்பினா கேமலி ஒர்டிகோஸா (Adolfina Camelli Ortigoza). இவரது கணவர் பெட்ரோ ஹேரிபெர்டோ கேலியானோ (Pedro Heriberto Galeano). தனது மனைவி அடோல்பினா மீது சந்தேகம் கொண்டு, அவரைத் தாக்குவதும், வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தும் வந்துள்ளார்.

மனைவி அடோல்பினாவின் பேஸ்புக் பக்கத்தினை முழுவதுமாக கேலியானோ பொறுப்பில் எடுத்துக் கொண்டார். பின்னர், மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு, அதற்கு வரும் லைக், கமெண்ட், ரியாக்ஷன் (Like, Comment & Reaction) என அனைத்துக்கும் ஒவ்வொரு குத்துவிட்டு சித்ரவதை செய்து வந்துள்ளார்.
சித்தரவதைக்கு ஆளான அடோல்பினாவின் நிலையைப் பார்த்த, கேலியானோவின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கேலியானோவை கைது செய்தனர்.

கேலியானோவின் தாக்குதலுக்கு ஆளான அடோல்பினாவின் வாய் உடைந்து விட்டதாகவும், அடையாளம் தெரியாதபடி முகம் வீங்கி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு முக ஒழுங்கமைப்பு சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது.
மனைவியை சித்தரவதை செய்த கேலியானோ கைது செய்யப்பட்டார். அவருக்கு 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.


0 Comments