அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம், சியாட்டில். இந்த நகரத்தின் துணை மேயராக சென்னையை சேர்ந்த 38 வயது பெண் ஷெபாலி ரங்கநாதன் (Shefali Ranganathan) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் வாஷிங்டன் மாகாணத்தில் இயங்கி வருகிற பொது போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டணியின் செயல் இயக்குனராக இருந்து வந்தார். இவர் 2001–ம் ஆண்டு மேல் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா சென்று சியாட்டில் நகரில் குடியேறியவர்.
சென்னையில் பிறந்த இவர் நுங்கம்பாக்கம் குட் ஷெப்பர்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை படித்தார். ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து பட்டம் பெற்றார். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழலியலில் முதுநிலைப்பட்டம் பெற்றார். அங்கு அவர் தங்கப்பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.


0 Comments