உகாண்டாவில் உள்ள வகிசோ (Wakiso) மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் 23 பெண்கள், மர்மநபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உகாண்டா போலீசார் விசாரணை நடத்திய காட்சி
கடந்த புதன்கிழமை அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சாரா நிலிமா (Sara Neliima) என்ற 22 வயதான பெண் மர்மநபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட, அவரது உடல் என்டேபி – கம்பாலா (Entebbe - Kampala) மெயின் சாலையில் இருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் உள்ள வாழை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.
கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள்
கடந்த 3 மாதங்களாக அந்த மாவட்டத்தில் 23 இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க உகாண்டா போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிபர் முசேவெனி நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று விபரங்களை சேகரித்தார். உள்ளூர் மக்களிடம், கொலையாளிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.
கடந்த வாரம் கொலைசெய்யப்பட்ட சாரா நிலிமா 
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உள்ளூர்வாசிகளிடம் தகவல் சேகரிக்கும் உகாண்டா அதிபர்