இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு உகாண்டா மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் உகாண்டா இந்தியன் அசோசியேசன் இணைந்து வருகிற 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கம்பாலாவில் உள்ள இந்திய அசோசியேசன் வளாகத்தில் (Indian Association Uganda – Nakesero Lane) வைத்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் உகாண்டா அனாதை (Orphan) குழந்தைகளுக்காக நடைபெறுகிறது.

மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாளராக உகாண்டாவிற்கான இந்திய உயர் ஆணையர் (High Commissioner) உயர்திரு. ஹெச்.இ. ஸ்ரீ ரவி சங்கர் (H.E. Shre Ravi Shankar) கலந்து கொள்கிறார்.
முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை உகாண்டா மண்டல தமுமுக தலைவர் வாஹித் முஹம்மத், நிர்வாகிகளான முஹம்மத் அஸ்ரஃப், அப்துல் முபாரக் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

0 Comments