உலகில் அதிகமான இரட்டையர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக உகாண்டா உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் “இரட்டையர்கள் திருவிழா – (Twins Festival)” ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படுகிறது. இதற்காக பெருமளவில் இரட்டையர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி கம்பாலாவில் வைத்து “கம்பாலா இரட்டையர்கள் திருவிழா” கொண்டாடப்படுகிறது. இதற்கான நிகழ்ச்சி ஜின்ஜா ரோட்டில் உள்ள “கியாடோன்டோ ரக்பி க்ளப் – Kyadono Rugby Club” வைத்து நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் துவங்குகின்றது. குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் இரட்டையர்கள் திருவிழா கோலாகலத்துடன் கொண்டாப்படுகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நபர் ஒருவருக்கு தலா 10,000 உகாண்டா ஷில்லிங்க்ஸ் கட்டணமாக பெறப்படுகிறது.
0 Comments