உகாண்டா சார்பில் மொரிஷியஸில் நடைபெற்ற 15 வயதினருக்குட்பட்ட ஆஃப்ரிக்க சாம்பியன்ஷிப் இறகுபந்து (Africa Championship Badminton) போட்டியில் தமிழரான “அர்ஷாத் முஹம்மத்” (Arshath Mohamed) முதல் இடத்தை பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். இவருடன் உகாண்டாவை சேர்ந்த எக்ஸ்மோ மின்டன் (Exmo Minton C) என்பவரும் தங்கப்பதக்கம் பெற்றார்.

தங்கப்பதக்கம் பெற்ற அர்ஷாத் முஹம்மத், உகாண்டா மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவரான வாஹித் முஹம்மத் அவர்களின் புதல்வன் ஆவார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியை சேர்ந்தவராவார்.

இறகுபந்து போட்டியில் மாபெரும் வெற்றி பெற்ற தமிழரான “அர்ஷாத் முஹம்மத்” அவர்களை “உகாண்டா தமிழன்” வாழ்த்துகிறது.


0 Comments