மலேசிய கோடீசுவரர் கோ கே பெங். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ. 2000 கோடி. மலேசிய முன்னணி தொழிலதிபரான இவர் பல்வேறு முக்கிய நட்சத்திர விடுதிகளின் அதிபர் மற்றும் பங்குதாரராக உள்ளார். மலேசியன் யூனைடர் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார்.

இவரது ஒரே மகள் ஏஞ்சலின் பிரான்சிஸ் கோ. இவர் தனது காதலுக்காக கோடிகணக்கான சொத்தினை துச்சமென தூக்கியெறிந்துள்ள சம்பவம் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
ஏஞ்சலின் இங்கிலாந்தில் படிக்கும் போது தனது நண்பர் ஜடிடிஹா எனபவரை காதலித்து உள்ளார். ஏஞ்சலின் கோ இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கரிபியன் தீவுகளை சேர்ந்த தரவு விஞ்ஞானியான ஜடிடிஹாவை தனது மகள் பிரான்சிஸ் திருமணம் செய்து கொள்வதை தந்தை ஏற்கவில்லை.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்தால் கோடிகணக்கான சொத்தினை இழக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்தும், பணத்தை விட காதலே முக்கியம் என முடிவெடுத்த ஏஞ்சலின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனை கரம் பிடித்துள்ளார்.
மலேசியாவின் மிகப்பெரி கோடிசுவரர்களின் ஒருவரான ஏஞ்சலினின் திருமணம் குறைந்த செலவில் மிக எளிமையாக நண்பர்கள் உள்ளிட்ட 30 பேர் முன்னிலையில் பெம்ப்ரோக் கல்லூரி தேவாலயத்தில் நடைபெற்றது.
0 Comments