உகாண்டா முஸ்லிம் சுப்ரீம் கவுன்சில் (Uganda Muslim Supreme Council) இயக்குநர் ஷேக். யஹயா இப்ராஹிம் ககுன்குலு (Yahaya Ibrahim Kakungulu) நேற்று (24-08-2017) வெளியிட்ட செய்தி குறிப்பில் உகாண்டாவில் பக்ரீத் பெருநாள் செப்டம்பர் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது என்ற தகவலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
இயக்குநர் இப்ராஹிம் ககுன்குலு, இந்த தகவலை ஓல்ட் கம்பாலாவில் உள்ள UMSC தலைமை அலுவலகத்தில் தெரிவித்தார். மேலும் அராபா (Arafat) நாள், இஸ்லாமிய மாதமான துல்-ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள், ஆகஸ்ட் 31-ம் தேதி வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

பெருநாள் சிறப்பு தொழுகை ஓல்ட் கம்பாலாவில் உள்ள பள்ளிவாசலில் காலை சரியான 9 மணிக்கு, ஷேக். ஷாபான் ரமதான் முபெஜி (Mufti of Uganda Shk. Shaban Ramadhan Mubaje) தலைமையில் நடைபெறும்.

மேலும் இயக்குநர், அனைவருக்கும் ஹஜ் பெருநாளின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.