உகாண்டா, கம்பாலாவில் உள்ள புகழ்பெற்ற மகெரேரே பல்கலைகழகத்தில் (Makerere University) வைத்து வருகிற 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை தேசிய மனக்கல்வி முகாம் (National Mind Education Camp) 4 நாள்கள் நடைபெறுகிறது.
பல்கலைகழகத்தில் உள்ள ஃப்ரீடம் சதுக்கத்தில் (Freedom Square, Main Hall) உள்ள பெரிய அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது. முகாமை உகாண்டா கல்வி மற்றும் விளையாட்டு அமைச்சகம் (Ministry of Education and Sports) மற்றும் சர்வதேச இளைஞர் கூட்டுறவு (International Youth Fellowship (IYF) அமைப்பு தொகுத்து வழங்குகிறது.

மேலும், உகாண்டா தகவல்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் (Ministry of Information, Communications Technology), தேசிய வழிகாட்டல் (National Guidance), மகெரேரே பல்கலைகழகம் (Makerere University), மற்றும் உகாண்டா ஒளிபரப்பு நிறுவனம் (Uganda Broadcasting Corporation) ஆகியவை இணைத்து முகாமை நடத்துகிறது.
இந்த முகாமில் 3000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு முகாம் நடைபெறும் 4 நாள்களும் சாப்பாடு, தங்கும் வசதி, மருத்துவ வசதி அனைத்தும் வழங்கப்படுகிறது. இதற்கு, நபர் ஒன்றிற்கு 30,000 உகாண்டா ஷில்லிங்க்ஸ் பெறப்படுகிறது.

முகாமில், மனக்கல்வி விரிவுரையில் (Mind Education Lecture), வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை கண்டு, தெளிவான வாழ்க்கை இலக்கை அடைவது பற்றியும், சிறப்பு விருந்தினர் விரிவுரைகளில் (Special Guest Lectures), பல்வேறு துறைகளில் பங்கேற்பவர்கள் எதிர்காலத்தில் நல்ல நுண்ணறிவுடன் தலைமை புலம் பெற்று, இலக்கை அடைவதை பற்றியும் விரிவான விளக்கவுரை வழங்கப்படுகிறது. இலவச மெடிக்கல் சேவை கொரிய மருத்துவர்களால் வழங்கப்படுகிறது.

முகாமில், பல்கலைகழகம் மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மதத்தலைவர்கள், அரசு அதிகாரிகள் போன்றவர்களுக்கும் மனக்கல்வி விரிவுரை வழங்கப்படுகின்றன.
29-ம் தேதி மாலை 5 மணி அளவில் “கிராசியஸ் இசைக்குழு” (Gracias Choir) –ன் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மனநிலை கல்வி Rev. பார்க் (Rev. Park) அவர்களால் வழங்கப்படுகிறது. 30-ம் மாலை 5 மணி அளவில் “Christmas Cantata” என்ற இசைக்கச்சேரி “கிராசியஸ் இசைக்குழுவினரால்” நடத்தப்படுகிறது.