உகாண்டா தலைநகர் கம்பாலா நகசெரோ மார்கெட் சாலையில் அமைந்துள்ள பிரபல வணிக நிறுவனத்தின் கார் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (14-07-2017) அன்று திருடு போனது. இதனை தொடர்ந்து வணிக நிறுவனத்தின் மேலாளர் உகாண்டா போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். மேலும் திருடப்பட்ட கார் கிடைக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். பல இடங்களில் தேடியும் கார் கிடைப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் (21-07-2017) சுமார் 2 மணி அளவில் வணிக நிறுவனத்தின் பணியாளர் ஒருவருக்கு, தங்கள் நிறுவனத்தின் கார் “நற்றட்டே” (Natate) எனும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் அருகில் நிற்பதாக தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து நிறுவன மேலாளர் மற்றும் பணியாளருடன் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரை பார்த்தபோது, தங்கள் நிறுவனத்தில் கார் என உறுதிபடுத்தப்பட்டு, காவல் நிலையத்தில் தெரிவித்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, மேலாளரிடம் காவல் துறை அதிகாரிகள் காரை வழங்கினர். கார் கிடைக்க பலவழிகளில் முயற்சிகள் மேற்கொண்ட "உகசேவா" பொது செயலார் வாஹித் முஹம்மத் அவர்களுக்கு நிறுவன மேலாளர் சார்பில் நன்றியை தெரிவித்து கொண்டார்.
திருடப்பட்ட கார் எப்படி அந்த பகுதிக்கு சென்றது...? காரை யார் திருடினார்...? திருடியவன் பயந்து காரை விட்டு சென்றானா....? காவல்துறையினர் தான் காரை கண்டுபிடித்தனரா...? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. பொதுமக்களே உஷாராக இருங்கள்.


0 Comments