உகாண்டாவின் உயரமான கட்டிடம் “பேர்ல் ஆஃப் ஆப்பிரிக்கா” ஹோட்டல் ("Pearl of Africa" Hotel) (formerly Kampala Hilton Hotel – முன்னர் “கம்பாலா ஹில்டன் ஹோட்டல்” என்று இருந்தது) ஜூன் 15 வியாழன் அன்று திறக்கப்பட்டுள்ளது.
![]() |
| Hotel "Pearl of Africa" Kampala - Uganda |
5 ஸ்டார் ஆடம்பர ஹோட்டல் 14 ஏக்கர் நிலப்பரப்பில் நகசெரோ ஹில் (Nakasero Hill) பகுதியில் அமைந்துள்ளது. அயா குழுமத்தின் (Aya Group of Companies) தலைவராக உள்ள முஹம்மது ஹமித் (Muhammed Hamid), இந்த ஹோட்டலின் முதலீட்டாளராக உள்ளார். அவர் கூறும்போது, ஹோட்டலின் மென்மை தன்மையை உயர்த்துவதற்கும், பார்ப்பவர்களின் கண்பார்வையை தூண்டுவதற்கும் என 1.75 டிரில்லியன் (sh1.75 trillion) உகாண்டா ஷில்லிங்ஸ் பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதாவது 300 மில்லியன் (US$300m) அமெரிக்க டாலராகும்.
![]() |
| Muhammed Hamid (Owner of the Hotel) |
2006-ம் ஆண்டு துவங்கப்பட்ட, இதன் பணிகள் சுமார் 11 ஆண்டுகள் நடைபெற்றதாக, அதிபர் ஹமித் கூறினார். மேலும் அவர், இதை உருவாக்க உலகின் முன்னணி ஹோட்டல் ஆப்பரேட்டரான “கார்ல்சன் ரீசீடர் குழு” (Carlson Rezidor Group) –க்கு நன்றியை தெரிவிக்க விரும்புவதாகவும் கூறினார்.

இங்கு அனைத்து ஆடம்பர வசதிகளுடன் கூடிய 296 அறைகள், இரண்டு உணவகங்கள், மூன்று பார்கள், 9 மீட்டிங் ஹால்கள், வணிக மையம் போன்றவைகள் உள்ளன. 22 மாடிகளை கொண்ட இதில் 15 மாடிகள் பொதுமக்கள் உபயோகிக்க திறப்பட உள்ளது. 250 அறைகள் முழுமையாக முடிக்கப்பட்ட அறைகளாக உள்ளன.
தற்போது 200 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்ற நியமிக்கப்பட்டு, ஹோட்டல் வணிகத்தை கையாள ஒரு வருடத்திற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக உகாண்டாவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற உயரமாக கட்டிடங்கள் பின்வருமாறு:-
1. Workers' House
2. Crested Towers - Tall Tower
3. Mapeera House
4. Uganda House
5. Cham Towers
6. Kampala Sheraton Hotel
7. Diamond Trust Building
8. Imperial Royale Hotel




0 Comments