உகாண்டா ஜனாதிபதி யோவேரி முசேவெனி (Yoweri Museveni), தான்சானியா (Tanzania) அதிபர் ஜாண் போம்பே மகுஃபுலி (John Pombe Magufuli) இடையே எண்ணெய் குழாய் அமைக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 1,400 கிலோ மீட்டர் தூரம் எண்ணெய் குழாய் அமைக்க “கிழக்கு ஆஃபிரிக்கன் கச்சா எண்ணெய் குழாய் உடன்படிக்கை” (East African Crude Oil Pipe Line Agreement (EACOP)) மூலம் கையெழுத்தானது. இந்த எண்ணெய் குழாய் லைன், உகாண்டாவில் உள்ள கோய்மா (Hoima) மாவட்டத்தில் இருந்து தான்சானியாவில் உள்ள டாங்கா (Tanga) துறைமுகப்பகுதி வரை அமைக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கை ஆரம்பிக்கப்பட்டபோது இரு தலைவர்களுக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தான்சானியா தலைநகர் டார்-எஸ்-சலாம் (Dar-es-Salaam)-ல் வைத்து நடைபெற்றது. அங்கு குழாய்த்திட்டம் மற்றும் கட்டுமான உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக உள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
உகாண்டா அதிபர் முசேவெனி பேசும் போது, “இந்த உடன்படிக்கையில் மூலம் நாங்கள் மிக சந்தோஷமாக இருக்கிறோம். நிலுவையிலுள்ள அனைத்து சிக்கல்களையும் முடித்துள்ளோம். இந்த திட்டத்திற்கான VAT (Value Added Tax) வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது, என்று நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்”. என்று கூறினார்.

தற்போது உகாண்டா 6.5 பில்லியன் பீப்பாய்கள் பெட்ரோலியம் எண்ணெய் கொண்டிருப்பதாக ஜனாதிபதி வெளிப்படையாக அறிவித்தார். தான்சானியா, இந்த திட்டத்துடன் உதவ ஒப்புக்கொண்டது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது எனவும் கூறினார்.
"நாங்கள் பெட்ரோலியம் எண்ணெய் இருப்பதை கண்டுபிடித்ததும், என் யோசனை அதை சுத்தப்படுத்தி, அதை நாட்டில் விற்று இருக்கலாம். ஆனால் உகாண்டாவில் நுகர்வு குறைவாக இருப்பதால், அது மற்ற சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு வழியைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது டாங்கா – கோய்மா (Tanga-Hoima) குழாய் திட்டம்” என முசவேனி விளக்கினார்.


0 Comments