சிரியாவில் தொடர்ந்து 6–வது ஆண்டாக அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் உள்நாட்டுப்போர் நீடித்து வருகிறது.
இதுவரை 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள உள்நாட்டுப்போரில், உயிர்ப்பலி இல்லாத நாளே இல்லை என்ற அளவுக்கு தாக்குதல்கள் நடக்கின்றன.

நேற்று தலைநகர் டமாஸ்கஸ் அருகில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் வான்தாக்குதல் நடைபெற்றது.
டவுமா நகரில் நடந்த தாக்குதலில் ஏதுமறியாத அப்பாவி குழந்தைகள் 3 பேர் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர்.
சாப்கா நகரில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 2 பெண்கள், ஒரு குழந்தை என 3 பேர் பலியாகினர்.
இரு தாக்குதல்களிலும் பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.


0 Comments