அமெ ரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று டொனால்டு டிரம்ப் வெள்ளை மாளிகை சென்று அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார். அவருடன் மனைவி மெலானியா, துணை அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள மிக் பென்ஸ், குடியரசு கட்சியை சேர்ந்த சபாநாயகர் பால்ரியான் ஆகியோரும் சென்று இருந்தனர்.

வெள்ளை மாளிகை சென்ற டொனால்டு டிரம்பை அதிபர் பராக் ஓபாமா வரவேற்றார். பின்னர் இவர்கள் இருவரும் ஒவல் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
டிரம்பின் மனைவி மெலானியா ஒபாமாவின் மனைவி மிச்செலியுடன் சந்தித்து பேசினர்.
அவர்களின் சந்திப்பு சுமார் ஒன்றைரை மணி நேரம் நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் உள்நாடு மற்றும் வெளியுறவு கொள்கைகள் குறித்து பேசினர்.
ஒபாமாவை சந்தித்த பின்னர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வெள்ளை மாளிகையில் அதிபர் பராக் ஓபாமாவை சந்தித்து தனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என பெருமையுடன் கூறினார்.
எதிர்காலத்தில் ஒபாமா வுடன் இணைந்து தனது செயல்பாடு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். அவற்றில் சில அதிசயிக்க தக்கவை இல்லை. மிகவும் கஷ்டமானவை என்றும் அவர் கூறினார்.
இவர்களின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னெஸ்ட் கூறும் போது, அவர்களுக்கு இடையேயான வேறுபாடு கள் களையப்படவில்லை. ஆனால் எந்தவித பிரச் சினையும் இன்றி சுமூகமாக நடந்தது என்றார்.பிரசாரத்தின் போது டிரம்ப் ஒபாமாவை கடுமை யாக சாடினார். அப்போது ஒபாமா அமெரிக்க குடிமகனா என கேள்வி எழுப்பினார். அவரது ஆட்சி குறித்து அதிருப்தி வெளியிட்டார்.
ஒபாமா தனது கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அப் போது டிரம்புக்கு கடுமையாக பதிலடி கொடுத்தார். அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என பேசினார். அதை மறந்து இருவரும் சகஜமாக பேசினர்.டிரம்புடன் ஆன சந்திப்பு குறித்து கருத்து கூறிய ஒபாமா, அற்புதமான நீண்ட கண்ணோட்டத்துடன் தங்களது பேச்சு வார்த்தை இருந்ததாக கூறினார்.


0 Comments