ஓய்வூதிய பணத்தை தவறாக பயன்படுத்தியதாக முன்னாள் அதிகாரிகள் வமஃபா (Mr Lwamafa), கிவானுகா குன்ஸா (Kiwanuka Kunsa) மற்றும் கிறிஸ்டோபர் ஒபே (Christopher Obey) ஆகியோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் சேர்ந்து 88.2 பில்லியன் உகாண்டா ஷில்லிங்ஸ் பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காம்பாலாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்ற (Anti Corruption Court) நீதிபதி லாரன்ஸ் கிடுடு (Justice Lawrence Gidudu), மூன்று பேருக்கும் தண்டனையை அறிவித்தார். அதன்படி, வமஃபா (Lwamafa) விற்கு 7 ஆண்டுகள் சிறையும், கிவானுகா குன்ஸா (Kiwanuka Kunsa) விற்கு 5 ஆண்டுகள் சிறையும், கிறிஸ்டோபர் ஒபே (Christopher Obey) க்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கினார்.

மேலும் இந்த மூன்று முன்னாள் அதிகாரிகளும் சேர்ந்து 50 பில்லியன் உகாண்டா ஷில்லிங்ஸ் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்ட்து. மேலும் நீதிபதி கூறும்போது, இந்த தீர்ப்பு அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் வரி செலுத்துவோரின் பணத்தை வைத்து மோசடி செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் எனவும் கூறினார்.