உகாண்டாவில் கார்த்தி நடித்த "காஷ்மோரா" திரைப்படம் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. கம்பாலாவில் உள்ள அக்காசியா மாலில் அமைந்துள்ள திரையரங்கில் வெளியானது. திரைப்படம் வெளியீட்டு ஏற்பாட்டினை உகாண்டா தமிழ் சங்கம் செய்திருந்தது.
தீபாவளி அன்று மாலை காட்சியும், மறுநாள் ஞாயிற்று கிழமை காலை காட்சியும் திரைப்பட்டது. திரைப்படத்தை உகாண்டாவாழ் தமிழர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.