உகாண்டா மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், அந்நாட்டு ஜனாதிபதி யோவேரி முசேவேனி ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

உகாண்டா சுகாதாரத்துறை அமைச்சகம் 2011-ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில், அந்நாட்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆறு ஆண்டுகளில் 6.4 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, பரவிவரும் எய்ட்ஸை கட்டுப்படுத்தும் நோக்கில், 2014-ஆம் ஆண்டுக்குள் 1.5 கோடி பேருக்கு ஹெச்.ஐ.வி. பரிசோதனை செய்ய உகாண்டா அரசு இலக்கு அமைத்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ஜனாதிபதி யோவேரி முசேவெனியும், அவரது மனைவியும் ஹெச்.ஐ.வி. பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டனர்.
மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் வகையில், ஒரு அரிய நிகழ்ச்சியாக உகாண்டா ஜனாதிபதி இந்தப் பரிசோதனை செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments