ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் எத்தியோப்பியா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த 20 ஆண்டுகளில் வந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், கிழக்கு கென்யாவில் உள்ள தாதாப் முகாமில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேரும், வட மேற்கு கென்யாவில் உள்ள காகுமா முகாமில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் அகதிகளும் உள்ளனர்.

இந்நிலையில் கென்யா நாட்டில் கொரோனா தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதுவரை 390க்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அகதிகள் உள்ள இரு முகாம்களிலும் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.