சோதனையான காலம் வரும்போதுதான் நமக்குள்ள இருக்கும் ஆற்றல் வெளியில் தெரிய வரும். இது பெரியவங்களின் வாக்கு. இதை கடவுள் நமக்கு வைக்கிற சோதனை என்றும் சொல்லுவாங்க.

அதுபோன்ற ஒரு சோதனையான காலக்கட்டம்தான் இப்போது நாம் எதிர்கொண்டுள்ள கொரோனா. நம்மை விட நம் தலைவர்களுக்கு இது மிகப்பெரிய பெரிய டெஸ்ட் என்றால் மிகையில்லை. நெருக்கடிகள் உண்மையான தலைவனை அடையாளம் காட்டும் என்பார்கள்.
அதுபோல் இந்த நெருக்கடி சில தலைவர்களை உலகத்தின் பார்வைக்கு வெளிச்சத்துக்கு இழுத்துட்டு வந்திருக்கு. இதில் அனைவரையும் கவரும் ஒரு நாட்டின் தலைவர் பற்றிய செய்திதான் இது.
அந்த தலைவர் உகாண்டா அதிபர் ககூட்டா முசேவெனி (Kaguta Museveni). கிட்டத்தட்ட 35 வருசமா பதவியில் இருக்கும் இவருக்கு வயது 75. கொரோனா அச்சுறுத்தல் வந்ததில் இருந்து அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றி மக்களுடன் பேசுகிறார்.
பெரிய அறிவிப்புகள்லாம் கிடையாது. நம்ம குடும்பத்தில் அப்பா, தாத்தா பேசுற மாதிரிதான். வீட்டிலுள்ளோர் பேசுவதை போல் மிக யதார்த்தமான பேச்சுதான். ஆனால் அது மக்கள்ட்ட செம ரீச் ஆயிருக்கு. அப்படியே அவர் சொல்றத கேட்டு நடக்கிறாங்க. அடுத்து எப்ப பேச வருவார்னு எதிர்பார்த்து காத்திருக்காங்க.
0 Comments